Srini’s கவிதைகள்
தூது
தென்றலை தூது விட்டேன்
அனல் காற்றோ என்று அஞ்சிவிட்டாய்!
மழையை தூது விட்டேன்
புயலோ என்று புரியாமல் நின்றாய்!
நண்பனை தூது விட்டேன்
வார்த்தையினால் சுட்டெரித்தாய்!
பிறகும் உன்னை சுற்றிவந்தேன் - காரணம்
கண்களால் என்னை சுண்டி இழுத்தாய்!!
கனவும் கைவிடுமோ
தாவரம் சூழ்ந்திருக்க - நான்
காதல் வரம் வேண்டிநிற்க - உன்
மனதினுள் நான் நிறைந்திருக்க - நீ
சிறிதளவு சிரித்து நிற்க
கலைந்தது இனிய கற்பனை!
கனவும் கைவிட்டது இந்த அற்பனை!!
ஆணினமே யோசியுங்கள்
கண்ணழகியாக வேண்டாம் கண்ணகியாக இருத்தல் வேண்டும்
என்று ஆண்கள் எதிர்பார்க்கும்போது
காமனாக வேண்டாம் இராமனாக இருக்க வேண்டும்
என்று பெண்களும் எதிர்பார்க்கக்கூடும்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
New comments are not allowed.